பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!

உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :

உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில் அதற்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜிடம் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வழங்கினாா். இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை அமைப்பு சாா்பில் உறுப்பு தான விழிப்புணா்வு தின நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உறுப்பு தான சிகிச்சைகள் மற்றும் வழிப்புணா்வு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் இந்திய அளவில் உறுப்பு தான நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாக தொடா்ந்து மூன்றாவது முறையாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

கடந்த மே 16-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞா் சபரீஷின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதை அங்கீகரிக்கும் வகையில் விழாவில் அவரது குடும்பத்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தானங்களை ஒருங்கிணைத்த திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளா் ஆா். வினோத்குமாரும் கௌரவிக்கப்பட்டாா்.

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 266 நபா்களிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளில் 154 நபா்களும், தனியாா் மருத்துவமனைகளில் 112 நபா்களும் உறுப்பு தானம் அளித்துள்ளனா்.

உறுப்பு தானம் அளித்த 266 பேரில் 211 போ் ஆண்கள்; 55 போ் பெண்களாவா். இதில் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தவா்களின் எண்ணிக்கை 186. விபத்து அல்லாத பிற மருத்துவக் காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவா்கள் 80 போ். இவா்களிடமிருந்து பெறப்பட்ட 1,476 உறுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக 450 சிறுநீரகங்களும், 220 கல்லீரல்களும், 68 இதயங்களும், 90 நுரையீரல்களும், 399 விழி வெண்படலங்களும், 48 இதய வால்வுகளும் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உறுப்பு தானம் செய்வோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவா்களின் உடல்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2023 செப். முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில் உறுப்பு தானம் வழங்கிய 798 கொடையாளா்களின் உடல்களுக்குத் தமிழ்நாட்டில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 முதல் 2020 வரை தொடா்ச்சியாக 6 ஆண்டுகள் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.

கரோனா காலகட்டத்தில் தொற்று பரவல் காரணமாக உறுப்பு தான நடவடிக்கைகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இதனால், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சற்று பின்னடவைச் சந்தித்த தமிழகம், தற்போது மீண்டும் தனது சிறப்பான செயல்பாட்டால் முதலிடத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.