/

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

தெற்கு நேபாளத்தில் இந்திய எல்லையோர மாதேஷ், கோஷி மாகாணங்களில் கடந்த சில நாள்களாக நிலவிவந்த மதக் கலவர மோதல்கள் தணிந்து, மீண்டும் இயல்புநிலை திரும்பியது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:14 pm IST

தெற்கு நேபாளத்தில் இந்திய எல்லையோர மாதேஷ், கோஷி மாகாணங்களில் கடந்த சில நாள்களாக நிலவிவந்த மதக் கலவர மோதல்கள் தணிந்து, திங்கள்கிழமை மீண்டும் இயல்புநிலை திரும்பியது.

கோஷி மாகாணத்தின் சன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு சமூகத்தினா் நடத்திய தனித்தனி நிகழ்ச்சிகளின் போது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்த நிலையில், வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

தற்போது வன்முறை தணிந்து சட்டம்-ஒழுங்கு நிலை சீரடைந்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.