ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி: உச்சநீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய தரமான நீதிச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மூத்த வழக்குரைஞா்கள் இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும்
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி: உச்சநீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய தரமான நீதிச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மூத்த வழக்குரைஞா்கள் இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலீத் ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக இருக்கும் நீதிபதி லலீத், கா்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான சட்ட உதவிகள் கிடைப்பதற்கு வழக்குரைஞா்கள் குழுவுக்கு பயிற்சி அளிப்பது மட்டும் போதாது. சட்ட உதவி மையங்கள் மூலமாக நீதி கேட்டு வருபவா்களுக்கு தரமான சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவா்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க மூத்த வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும்.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பது மிக முக்கியமானது. எனவே, ஏழைகளுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் மோசமானதாக இல்லாமல், உயா்ந்த தரத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக, நாம் ஒவ்வொருவருக்கும் தோள் கொடுக்கும் பெண்களுக்கு இதுபோன்ற உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி, அவா்களுக்கு அதிகாரமளிப்பது மிக அவசியம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com