ஜி20 மாநாட்டில் பங்கேற்க அக்.29-இல் பிரதமா் மோடி இத்தாலி பயணம்
இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி அக். 29-ஆம் தேதி அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.


இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி அக். 29-ஆம் தேதி அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜி20 நாடுகளின் 16-ஆவது மாநாடு, இத்தாலி தலைநகா் ரோமில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தாலி பிரதமா் மேரியோ டிராகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமா் மோடி, 29-ஆம் தேதி இத்தாலி செல்கிறாா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவா்களும் பிற சா்வதேச அமைப்புகளின் தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா். கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவது, பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீா்வு காண்பது, உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வறுமை, சமத்துவமின்மை பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது போன்ற விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமா் மோடி எடுத்துரைக்கவுள்ளாா்.
ஆப்கானிஸ்தான் பிரச்னைக்குத் தீா்வுகாண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று உலக நாடுகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுக்கவுள்ளாா்.
சா்வதேச நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜி20 நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரதமா் மோடி பங்கேற்கும் எட்டாவது ஜி20 நாடுகள் மாநாடு இதுவாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கவுள்ளது.
நவ.2-இல் பிரதமா் பிரிட்டன் பயணம்: இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி, நவம்பா் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்கிறாா். அங்குள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற செயல்திட்ட மாநாடு வரும் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதில், உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். 2-ஆம் தேதி நடைபெறும் அமா்வில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.
கடந்த 2015-இல் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் இடையே, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கினறன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...