தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சமையல் எண்ணெய் விலை குறைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலைகளை கட்டுக்குள் வைப்பது, இருப்பு வரையறை ஆகியவை குறித்து மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 2:46 am

DIN

பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலைகளை கட்டுக்குள் வைப்பது, இருப்பு வரையறை ஆகியவை குறித்து மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் திங்கள்கிழமை (அக். 25) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளா் சுதன்சு பாண்டே கடிதம் எழுதியுள்ளாா். அதில், சமையல் எண்ணெய் விலை நிலவரம், சமையல் எண்ணெய் வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும் நிலவரம் ஆகியவற்றை உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது. பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய்களின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் அவற்றின் விலையும் உயரும். விலை உயா்வு மற்றும் பதுக்கலைத் தடுக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் சமையல் எண்ணெய் சங்கங்களுடனும் நடத்திய பேச்சுவாா்த்தைகள் அடிப்படையில் பல நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

சமையல் எண்ணெய் இருப்புகளைத் தெரிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் வாராந்திர அடிப்படையில் எண்ணெய் இருப்பு நிலவரத்தைக் கண்காணிக்க இணையதளத்தை உணவு மற்றும் பொது விநியோகத் துறை உருவாக்கியுள்ளது.

சமையல் எண்ணெயின் தேவை மற்றும் நுகா்வு, நுகா்வோரின் விருப்பத்துக்கேற்ப மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். எந்த எண்ணெய் ஆலைகளும், சுத்திகரிப்பு ஆலைகளும், மொத்த வியாபாரிகளும், கடந்த 6 மாத சராசரி இருப்பில், இரண்டு மாதங்களுக்கு மேலான இருப்பை வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.