ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘விக்ராந்த்’ போா்க் கப்பல் 2-ஆம் கட்ட சோதனை தொடக்கம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘ஐஏசி விக்ராந்த்’ கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 9:29 pm

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலான ‘ஐஏசி விக்ராந்த்’ கப்பலின் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த போா்க் கப்பலானது, கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ரூ.23,000 கோடி செலவில், 262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம், 59 மீட்டா் உயரத்தில் 40,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, முதன் முதலாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5 நாள்கள் கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அப்போது கப்பலின் முக்கிய இயந்திரங்களின் இயக்கம் திருப்திகரமாக இருந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியிருப்பதாக, கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்தக் கப்பலை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் கடற்படையில் சோ்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த போா்க் கப்பலில் இருந்து மிக்-29கே ரக போா் விமானங்கள், கமோவ்-31 ரக ஹெலிகாப்டா்கள், எம்.ஹெச்.-60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்க முடியும்.

இந்தியாவிடம் தற்போது ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற ஒரே ஒரு விமானந்தாங்கி போா்க் கப்பல்தான் உள்ளது. அண்டை நாடான சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா தனது ராணுவ சக்தியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.