தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு கரோனா

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாடேலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு கரோனா

Updated On :28 அக்டோபர் 2021, 5:51 am

DIN

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாடேலுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் திலீப் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கரோனா நோய்த் தொற்றின் அறிகுறி காரணமாக பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன்.

மேலும், நாக்பூர் மற்றும் அமராவதி சுற்றுப்பயணத்தின் போது என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.