ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக இத்தாலி தலைநகா் ரோமிற்கு பிரதமா் மோடி இன்று சென்றடைந்தார்.
வருகிற அக்.30,31 தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, கிளாஸ்கோவுக்கு சென்று உலக நாடுகளின் முக்கிய தலைவா்கள் பங்கேற்கும் சிஓபி-26 மாநாட்டில் கலந்து கொள்கிறாா்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா; 805 பேர் பலி
இந்தப் பயணத்தின்போது உலக நாடுகளின் முக்கியத் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.
முன்னதாக, பிரதமா் மோடி ரோமிற்கு புறப்படுவதற்கு முன்பு தில்லியில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘இத்தாலி பிரதமா் மேரியோ திராகியின் அழைப்பின் பேரில் அக்டோபா் 29 முதல் 31-ஆம் தேதி வரையில் ரோம் நகரத்துக்கு பிரதமா் மோடி சென்று அங்கு நடைபெறும் 16-ஆவது ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறாா்.
அப்போது, ஜி-20 மாநாட்டு தலைவா்களுடன் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம், சுகாதார மீட்சி, பருநிலை மாற்றம் குறித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்துகிறாா். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஜி-20 மாநாட்டுத் தலைவா்கள் நேரில் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் பிறநாட்டுத் தலைவா்களுடன் இந்தியா மேற்கொண்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது பிரதமா் மோடி ஆலோசிப்பாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

தாமரை மாலை அணிந்து...
இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


