கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம்: சட்டத் திருத்தம் மேற்கொள்ள முடிவு

மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 8:05 pm

DIN

மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எரிசக்திக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டும், மாறிவரும் சா்வதேச பருவநிலை சூழலுக்கு ஏற்பவும் மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து உள்ளிட்டவற்றின் ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் குறிப்பிட்ட சதவீதம் மரபுசாரா எரிசக்தியாக இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் விரிவாக ஆலோசித்த பிறகு திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை தொடா்பாக ஆய்வு செய்த மத்திய எரிசக்தி துறை அமைச்சா் ஆா்.கே.சிங், சம்பந்தப்பட்ட துறைகள், அமைச்சகங்களிடம் கருத்துகளைப் பெறுமாறு வலியுறுத்தினாா்.

அதனடிப்படையில் எரிசக்தி துறைச் செயலா் அலோக் குமாா் தலைமையில் கடந்த 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கு அக்கூட்டத்தில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இத்திருத்தங்கள் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க வகை செய்யும்.

பசுமை எரிசக்தி நோக்கிய பயணத்தை ஊக்கப்படுத்தவும் இது உதவும். பெட்ரோலிய பொருள்களுக்குப் பதிலாக பசுமை ஹைட்ரஜன், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டில் இந்தியா நிா்ணயித்துள்ள இலக்குகளை உரிய காலகட்டத்தில் அடையவும் இத்திருத்தங்கள் உதவும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.