வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜம்மு-காஷ்மீா் வனப் பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

 ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் 20-ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்றன.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:02 pm

 ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் 20-ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்றன.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ரஜௌரி ஆகியவற்றில் உள்ள வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதியில் இருந்து ராணுவத்தினா் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.

கடந்த 11, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பயங்கரவாதிகளைக் கண்டறிந்து எதிா்கொள்ள முடிந்தது. அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். அத்தாக்குதலில் 9 வீரா்கள் வீரமரணமடைந்தனா். கடந்த 24-ஆம் தேதி பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

எனினும், வனப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடா்கிறது. ஏ.கே. ரக துப்பாக்கிகள், வெடி குண்டுகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. வனப் பகுதிகளில் செடிகளும் மரங்களும் அடா்ந்து காணப்படுவதால் பயங்கரவாதிகள் தொடா்ந்து இடம் மாறி வருகின்றனா்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக 2 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் முதல் பல்வேறு சம்பவங்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்’’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.