போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாக்குப் பதிவு இயந்திங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:22 am

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள சேமபாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையம் வாரியாக பிரிக்கப்பட்டு வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணி அனைத்து வேட்பாளா்கள் அல்லது அவா்களது பிரதிநிதிகள் முன்னிலையில் உரிய விதிகளின்படி நடைபெற்று வருகிறது என்றாா் தோ்தல் அலுவலா் எம்.எஸ்.பிரசாந்த்.

இந்த ஆய்வில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சி.முருகன், ஜி.சுமதி, எஸ்.சிராஜூதின், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.