மூத்த பத்திரிகையாளர், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சந்தன் மித்ரா(65) புதன்கிழமை இரவு தில்லியில் காலமானார்
சந்தன் மித்ரா
சந்தன் மித்ரா
Published on
Updated on
1 min read


புதுதில்லி: மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சந்தன் மித்ரா(65) புதன்கிழமை இரவு தில்லியில் காலமானார். 

பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இரவு காலமானதாக அவரது மகன் குஷன் மித்ரா சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சந்தன் மித்ரா மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆகஸ்ட் 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த மித்ரா, ஜூலை 18, 2018 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.

மாநிலங்களவை பாஜக உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா தனது நெருங்கிய நண்பர் சந்தன் மித்ராவை இழந்ததாக சுட்டுரை பக்க இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

"எனது நெருங்கிய நண்பர்-முன்னோடி ஆசிரியர் மற்றும் முன்னாள் எம்.பி சந்தன் மித்ராவை இன்று காலை இழந்தேன். நாங்கள் லா மார்டினியரின் மாணவர்களாக ஒன்றாக இருந்தோம்.

மேலும் செயின்ட் ஸ்டீபன் மற்றும் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றோம். நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தோம், அயோத்தியின் உற்சாகத்தையும், காவி அலையையும் பகிர்ந்து கொண்டோம்." 

மேலும் "1972 இல் பள்ளி பயணத்தின் போது சந்தன் மித்ராவும் நானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். ஓம் சாந்தி," என்று தாஸ்குப்தா கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com