நியூசிலாந்தில் மங்களூரு தம்பதியை குத்திக் கொன்ற மகன்

நியூசிலாந்தில் வாழ்ந்து வந்த மங்களூருவைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகனால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். 
நியூசிலாந்தில் மங்களூரு தம்பதியை குத்திக் கொன்ற மகன்
நியூசிலாந்தில் மங்களூரு தம்பதியை குத்திக் கொன்ற மகன்


மங்களூரு: நியூசிலாந்தில் வாழ்ந்து வந்த மங்களூருவைச் சேர்ந்த தம்பதி, அவர்களது மகனால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். 

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்து 5 நாள்களுக்குப் பிறகே வெளிவுலகுக்குத் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், தன்னையும் கடுமையாகத் தாக்கிக் கொண்ட மகன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்லாந்தில் வசித்து வந்த எலிசபெத் 'எல்ஸி' பங்கேரா (55) மற்றும் அவரது கணவர் ஹெர்மன் பங்கேரா (60) ஆகியோர் தங்களது மகனால் படுபயங்கரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் செவ்வாயன்றுதான் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிய வந்துள்ளது.  அவர்களது அண்டைவீட்டைச் சேர்ந்த குப்தா என்பவர் கூறுகையில், அவர்களதுமகன் ஷீல் (23) பொறியியல் பட்டப்படிப்பு முடித்தநிலையில், குடும்பத்திலிருந்து வெளியேறி தனியாக வசிக்க முடிவு செய்ததால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

இதனால் பெற்றோர் மற்றும் மகனுக்கு இடையே தகராறு நீடித்து வந்ததாகவும், சில நாள்களுக்கு முன்பு இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நேரிட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த ஷீல், கத்தியால் பெற்றோரை கடுமையாகத் தாக்கிக் கொன்றுவிட்டு, தன்னையும் தாக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகக் கூறுகிறார் குப்தா.

ஹெர்மன் மற்றும் எல்ஸியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலையில் நடந்து முடிந்தன. ஹெர்மன் மும்பையில் உள்ள பள்ளியின் நிர்வாகியாகவும், எல்ஸி தனியார் நிறுவனத்தில் மிக முக்கியப் பொறுப்பிலும் இருந்துள்ளார். இருவரும் திருமணம் முடிந்து ஷீல் பிறந்ததும், தங்களது மகனுக்கு சிறந்த கல்வி மற்றும் நல்ல எதிர்காலத்தை உருவாக்க கடந்த 2006ஆம் ஆண்டு மூவரும் நியூசிலாந்து செல்ல முடிவு செய்தனர். மகன் ஷீல்லும் படிப்பில் சிறந்து விளங்கினான். நியூசிலாந்தில் ஹெர்மன் மருத்துவத் துறை நிறுவனத்திலும், எல்ஸி ஆக்லாந்து பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com