விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


விநாயகர் சதுர்த்தியையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். கரோனாவுக்கு எதிரான நம்முடைய முயற்சிகள் வெற்றி பெறவும், அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அருளவும் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் கரோனா-நட்புடன் நடந்துகொள்வோம்' என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்த சுபநிகழ்ச்சி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...