தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

டெம்போ வாகனத்திற்குள் நடந்த கொடூரம்; சித்திரவதைக்குள்ளான மும்பை பெண்

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை ராஜவாதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :11 செப்டம்பர் 2021, 6:28 am

DIN

மகாராஷ்டிராவில் மும்பை அருகே சகினகா புறநகர் பகுதியில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டெம்போ வாகனத்திற்குள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றம்சாட்டப்பட்ட மோகன் செளகான் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை காலை, கைராணி சாலையில், பெண்ணை ஆண் ஒருவர் தாக்கிவருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, சம்பவத்திற்கு சென்றபோது ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் கிடந்தார். அவரை பெண்ணை ராஜவாதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இரும்பு தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சாலை அருகே நின்று கொண்டிருந்த டெம்போ வாகனத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது.

வாகனம் முழுவதும் ரத்த கறை படிந்திருந்தது. அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார். கொலை முயற்சி, பாலியல் வன்புணர்வு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.