கோப்புப்படம்
கோப்புப்படம்

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?

விஜய் ரூபானியின் ராஜிநாமா, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த போதிலும், மத்திய தலைமையின் உத்தரவின்படியே இந்த அரசியல் நகர்வு நிகழ்ந்ததாக பாஜக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.

குஜராத்தை சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள், லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரிலிருந்து ஒருவர் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ரூபானியின் ராஜிநாமா, பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த போதிலும், மத்திய தலைமையின் உத்தரவின்படியே இந்த அரசியல் நகர்வு நிகழ்ந்ததாக பாஜக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலுக்கு 16 மாதங்களுக்கு முன்பு, கட்சி தலைமை கேட்ட கொண்டதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து ஆனந்திபென் படேல் விலகினார்.

அதேபோல், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த காரணத்தையும் சொல்லாமல் முதல்வர் பொறுப்பை விஜய் ரூபானி ராஜிநாமா செய்துள்ளார். அதன் பின்னர் பேசிய ரூபானி, மாநிலத்தின் வளர்ச்சி பாதை புதிய தலைமையின் கீழ் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாஜக மாநில பொறுப்பாளர் புபேந்திர யாதவ், மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபாலா, பாஜக தேசிய செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்தான், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும்படி விஜய் ரூபானியிடம் மூத்த தலைவர்கள் கேட்டு கொண்டுள்ளனர். அனைவரின் பேரும் ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் குஜராத்தைச் சேராத ஒருவர் கூட முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

லட்சத்தீவு, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன்-டையு யூனியன் பிரதேசங்களின் நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பாஜகவின் ஒருசாரர் கூறுகின்றனர்.

அதேபோல், மத்திய மீனவளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு துறை அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்ட்வியா ஆகியோரின் பெயரும் பரீசிலினையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com