இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டில் புதிதாக 25,404 பேருக்கு கரோனா; 339 பேர் பலி

நாட்டில் இன்று காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,404 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 339 பேர் பலியாகியுள்ளனர்.

News image
நாட்டில் புதிதாக 25,404 பேருக்கு கரோனா; 339 பேர் பலி
Updated On :14 செப்டம்பர் 2021, 4:41 am

DIN

நாட்டில் இன்று காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,404 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 339 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,89,579 ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 37,127 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,24,84,213 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 339பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 4,43,213-ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,62,207-ஆக உள்ளது. 

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 75.22 கோடியாக அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.