மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் இணைந்தார் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்

கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பொதுச் செயலருமான கே.பி. அனில் குமார் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் இணைந்தார் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்


கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பொதுச் செயலருமான கே.பி. அனில் குமார் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

மற்றொரு மூத்த தலைவர் பி.எஸ். பிரசாந்தைத் தொடர்ந்து, அனில் குமாரும் காங்கிரஸிலிருந்து விலகி கம்யூனிஸ்டில் இணைந்திருப்பது காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு மூலம் ராஜிநாமா முடிவை அறிவித்த அனில் குமார் மேலும் கூறியது:

"நான் முதுகில் குத்தப்பட்டு உயிரிழப்பதற்குத் தயாராக இல்லை. கட்சியின் தற்போதைய தலைமையில் சர்வாதிகார மனப்பான்மை இருக்கிறது. கட்சி தனது இருப்பையும், ஜனநாயகத்தன்மையையும் இழந்துவிட்டது."

அனில் குமாரின் ராஜிநாமா குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மீதான அனில் குமாரின் விளக்கம் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லாததால், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைவர் கே. சுதாகரன் அறிக்கை வெளியிட்டார். அனில் குமார் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அவரது ராஜிநாமா கட்சியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

ராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அனில் குமாரை, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான கொடியேறி பாலகிருஷ்ணன் வரவேற்றார். பி.எஸ். பிரசாந்தும் உடனிருந்தார்.

முன்னதாக, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தேர்வு விவகாரத்தில் வெளிப்படையாகவே கட்சிக்கு எதிரான கருத்தைத் தெரிவித்ததால் அனில் குமாரும், முன்னாள் எம்எல்ஏ சிவதாசனும் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com