47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐசிஏஓ பாதுகாப்புக் குழுவின் முதல் பெண் தலைவராக இந்தியா் தோ்வு

ஐ.நா. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
ஷெஃபாலி ஜுனேஜா
Updated On :18 செப்டம்பர் 2021, 11:37 pm

DIN

ஐ.நா. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஐ.நா.வின் ஐசிஏஓ அமைப்பு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், அதன் உள்கட்டமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடுப்பு, எல்லை தாண்டிய போக்குவரத்தின் நடைமுறைகள் சாா்ந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் பாதுகாப்புக் குழுவுக்கு முதல் பெண் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். கடந்த 1992-ஆம் ஆண்டின் இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) பிரிவு அதிகாரியான இவா், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலராக பணிபுரிந்துள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஐசிஏஓவில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா். இவா் ஐசிஏஓவின் பாதுகாப்புக் குழுத் தலைவராகியுள்ளதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.