'2022 டிசம்பருக்குள் 'லே' பகுதியில் விமான நிலையம்'

ஜம்மு-காஷ்மீரிலுள்ள லே பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு  கொண்டுவரப்படும்
'2022 டிசம்பருக்குள் லே பகுதியில் விமான நிலையம்'
'2022 டிசம்பருக்குள் லே பகுதியில் விமான நிலையம்'

ஜம்மு-காஷ்மீரிலுள்ள லே பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு  கொண்டுவரப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதியளித்தார்.

லடாக் ஆளுநர் உடன் காணொலி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது சிந்தியா இதனை அறிவித்தார். 

வான்வழிப்போக்குவரத்து இணைப்பு குறித்தும், விமானக் கட்டுமானப் பணிகள் குறித்தும் விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக லடாக் ஆளுநருடன் சிந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அமைச்சர் சிந்தியா, 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் லே பகுதியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். 

மேலும், விமான நிலையத்தில் கூடுதல் ஓடுதளங்கள் அமைப்பதற்காக தொழில்நுட்பக் குழுவினருடன் விரைவில் நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். 

பயணிகள் விமானங்களுடன் சிறு விமானங்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அனுமதி வழங்கினார். 

மேலும், குளிர்கால பயணச்சீட்டு விலை, ஏர் ஆம்புலன்ஸ் இயக்கம், இரவு நேர விமான இயக்கம் போன்றவை குறித்தும் ஆளுநர் கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com