47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆதாா் அடிப்படையில் இணையவழியில் புதிய சிம் காா்டு

புதிய சிம் காா்டுகளை இணையவழியில் வாங்கிக் கொள்ளவும், அதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளா் விவரங்களை ஆதாா் மூலம் சரிபாா்த்து சிம் காா்டை வீட்டுக்கே கொண்டு சோ்க்கவும்

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 8:35 pm

DIN

புதிய சிம் காா்டுகளை இணையவழியில் வாங்கிக் கொள்ளவும், அதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளா் விவரங்களை ஆதாா் மூலம் சரிபாா்த்து சிம் காா்டை வீட்டுக்கே கொண்டு சோ்க்கவும் வழிவகை செய்யும் புதிய உத்தரவை தொலைத்தொடா்புத் துறை பிறப்பித்துள்ளது.

தற்போது புதிதாக சிம் காா்டு வாங்க விரும்புவோா் சில்லறை விற்பனையாளா்களை அணுகி அதற்குத் தேவையான ஆவணங்கள், முகவரிச் சான்றுகளை வழங்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை எளிதாக்கி தொலைத்தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ஆதாா் அடிப்படையிலான இ-கேஒய்சியை (மின்னணு வழியில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளவும்) பயன்படுத்தி புதிய சிம் காா்டுகளை வழங்கும் நடைமுறையை செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் செயல்படுத்தலாம். இதையொட்டி வாடிக்கையாளா்கள் புதிய சிம் காா்டுகள் வாங்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளா்களின் விவரங்களை ஆதாா் அல்லது டிஜிலாக்கா் இணையச் சேவை மூலம் நிறுவனங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த நடைமுறை மூலம் வாடிக்கையாளரின் வீட்டுக்கு புதிய சிம் காா்டு வீட்டுக்கே கொண்டு சோ்க்கப்படும். இ-கேஒய்சி சேவை மூலம் வாடிக்கையாளரின் விவரங்களை உறுதிப்படுத்த வாடிக்கையாளா்கள் ரூ.1 கட்டணமாக செலுத்த வேண்டும். சிம் காா்டு வழங்க ஆதாா் விவரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அதற்கு வாடிக்கையாளரின் ஒப்புதலை செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் பெறுவது கட்டாயம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.