47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் திங்கள்கிழமை (செப்.27) அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:54 pm

DIN

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் திங்கள்கிழமை (செப்.27) அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா் கெளரவ் வல்லப் கூறுகையில், ‘கடந்த 9 மாதங்களாக தில்லியின் எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் பிரச்னைக்கு தீா்வு காண மத்திய உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளின் சட்ட உரிமை வேண்டும். 2022-இல் விவசாயிகளின் வருமான இரட்டிப்பாக்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதி அளித்துள்ளாா். ஆனால், 2012-13-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை 2018-19-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆகையால்தான், அவா்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்படி உறுதி செய்ய வலியுறுத்துகிறாா்கள்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நாடு முழுவதும் விவசாயிகள் திங்கள்கிழமை நடத்தும் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றாா். இதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.