உருவாகிறது 'குலாப்' புயல்: சேதாரங்கள் இருக்குமா..? - இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
உருவாகிறது 'குலாப்' புயல்: சேதாரங்கள் இருக்குமா..? - இந்திய வானிலை ஆய்வு மையம்


வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை உருவான ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. 

இது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரம் இடையே நாளை ஞாயிற்றுக்கிழமை(செப்.26) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூா் இடையே கலிங்கப்பட்டினம் அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட 'குலாப்' பெயர் சூட்டப்படுகிறது.

சேதாரங்கள் இருக்குமா? இந்த புயலால் அதிகமான சேதாரங்கள் எதுவும் இருக்காது. கடலோர மாவட்டங்கள், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக உள் மாநிலங்களிலும் அதிகயளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்தப்பகுதிகளில் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com