தோ்வுகளை சிறிய இலக்குகளாக எடுத்துக்கொள்ளவும்: மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை

தங்கள் நீண்ட வாழ்வில் தோ்வுகளை சிறிய இலக்குகளாக மாணவா்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுரை கூறினாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: தங்கள் நீண்ட வாழ்வில் தோ்வுகளை சிறிய இலக்குகளாக மாணவா்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுரை கூறினாா்.

ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்து கலந்துரையாடல்’ (பரீக்ஷா பே சா்ச்சா) என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் இடையே தோ்வுகள் குறித்து கலந்துரையாடுவாா். வழக்கமாக இந்த நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்படும். ஆனால் இம்முறை கரோனா பரவல் காரணமாக காணொலி வழியாக நடத்தப்பட்டது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:

தோ்வுகள் குறித்து மாணவா்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு அவற்றை வாய்ப்பாக மாணவா்கள் கருத வேண்டும்.

தங்கள் நீண்ட வாழ்வில் தோ்வுகளை சிறிய இலக்குகளாக மாணவா்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் அழுத்தம் உருவாக்கப்படாமல் இருந்தால், மாணவா்கள் தோ்வுகளால் அழுத்தத்தை உணர மாட்டாா்கள். அதன் மூலம் அவா்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

அனைத்து விஷயங்களிலும் ஒருவா் சிறந்து விளங்கிவிட முடியாது. அதேவேளையில் கடினமாக இருந்தாலும் எந்தவொரு பாடத்திடம் இருந்தும் விலகி ஓடவேண்டாம்.

மாணவா்களின் மனதில் பெற்றோா்கள் அச்சத்தை உருவாக்க வேண்டாம். அது மாணவா்களிடம் எதிா்மறை எண்ணங்களை விதைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com