ஆமதாபாத்: மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆமதாபாத்: மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாநகராட்சி சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் விமர்சித்தது.

இந்நிலையில் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிபெர்க் சூப்ராடெக் ஆய்வகத்துடன் இணைந்து ஆமதாபாத் மாநகராட்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நிபெர்க் சூப்ராடெக் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் சந்திப் ஷா கூறியதாவது, கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை கொடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய மக்கள் மையத்தில் வழங்கப்பட்டுள்ள கியூ-ஆர் குறியீடை ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் பரிசோதனை செய்துகொள்பவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்படும்.

பின்னர் மையத்திலிருந்து முழுக் கவச உடை அணிந்த நபர் குறிப்பிட்ட நபரிடம் வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பார். 5 - 10 நிமிடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்படும். காலை 8 மணி முதல் பரிசோதனை செய்யப்படுகிறது. 50 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com