கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு குறித்து பிரதமர் இன்று ஆலோசனை

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பது தொடரபாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை நடத்துகிறார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :14 ஏப்ரல் 2021, 11:46 am IST


புது தில்லி: கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைப்பது தொடரபாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை நடத்துகிறார்.

புது தில்லியில் இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்திருந்தனர். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

கோரிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 13,500-க்கும் மேல் பதிவாகியுள்ள நிலையில், 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், சிபிஎஸ்இ தோ்வுகளை மே 4-ஆம் தேதி முதல் நடத்த முடிவெடுத்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.