ஜூலை மாதத்தில் ரூ.1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ.1,16,393 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் ரூ.1.16 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ.1,16,393 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 22,197 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 28,541 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ 57,864 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ. 27,900 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ 7,790 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.815 கோடி உட்பட) ஆகும்.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ரூ.5 கோடி வரையிலான மொத்த விற்றுமுதல் கொண்ட வரி செலுத்துவோர், 2021 ஜூன் மாதத்திற்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமத கட்டண தள்ளுபடி/வட்டி குறைப்பு (15 நாட்களுக்கு) உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2021, ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை வசூலான சரக்கு மற்றும் சேவை வருவாயான ரூ. 4,937 கோடியும் மேல் குறிப்பிட்ட இலக்கங்களில் அடங்கியுள்ளன.

வழக்கமான பைசலாக ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.28,087 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.24,100 கோடியையும் இந்த மாதத்தின் போது அரசு வழங்கியது. கடந்த வருடத்தின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் இந்தாண்டு 33% அதிகமாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட 36% ம், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருவாய் 32% ம் அதிகம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின்படி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட நடப்பாண்டு ஜூலை மாதத்தில் தமிழகம் 36% நேர்மறை வளர்ச்சியையும், புதுச்சேரி 6% எதிர்மறை வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாத வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக ஏற்பட்டது.

ஜூன் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல், நடப்பாண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது. கரோனா தொற்றினால் மே மாதம் பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழு அல்லது பகுதி நேர பொது முடக்கத்தைக் கடைப்பிடித்தன. எனினும், தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 2021, ஜூலை மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1 கோடியைக் கடந்துள்ளது,

பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதை எடுத்துரைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com