நீதிபதி மரண வழக்கு: காவல்துறை அலுவலர் இடைநீக்கம்

ஜார்க்கண்ட் நீதிபதியை வாகனத்தை கொண்டு மோதிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜார்க்கண்ட் நீதிபதியை வாகனத்தை கொண்டு மோதிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிமன்றத்தில் 8-ஆவது மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணிபுரிந்தவா் உத்தம் ஆனந்த் (49). அவா் தன்பாதில் கடந்த புதன்கிழமை அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

அவா் நடைப்பயிற்சி சென்றபோது, பின்புறமிருந்து வாகனமொன்று அவா் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தெளிவாக காட்டின. அதையடுத்து, நீதிபதி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதர்திஹ் காவல் நிலைய பொறுப்பாளர் உமேஷ் மாஞ்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை காணவில்லை என வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து எஸ்எஸ்பி சஞ்சீவ் குமார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது,

அதுமட்டுமின்றி, இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட இருவர் பதர்திஹ் காவல் நிலைய எல்லையை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றம் கவலை தெரிவித்ததோடு, இதுதொடா்பான விசாரணையை மாநில காவல்துறை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க ஜார்க்கண்ட் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com