நாடாளுமன்ற ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி தனித்தனியே ஆலோசனை: புதிய வியூகம் வகுக்கப்படுமா?

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மோடி தலைமையில் ஆளும் கூட்டணியும், ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற ஆளும்கட்சி - எதிர்க்கட்சி தனித்தனியே ஆலோசனை
நாடாளுமன்ற ஆளும்கட்சி - எதிர்க்கட்சி தனித்தனியே ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மோடி தலைமையில் ஆளும் கூட்டணியும், ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய காலை உணவுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், பிற கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் போட்டி நாடாளுமன்றம் நடத்துவது தொடர்பாகவும் முடுவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஆளும் கூட்டணியின் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com