ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லியில் நாளை(ஆக.10) பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 10) பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது. 

News image
பிரதமர் மோடி
Updated On :9 ஆகஸ்ட் 2021, 11:51 am

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 10) பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்ததால் 15 ஆவது நாளாக இரு அவைகளும் முடங்கின. முன்னதாக இன்று மக்களவையில் எந்த விவாதமுமின்றி மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

கடந்த ஜூலை 27, ஆகஸ்ட் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து நாளை(ஆக.10) அன்று தில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.