விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.5,000; 45 நிமிடங்களில் முடிவு

தில்லி விமான நிலையத்தில் கரோனா பிசிஆர் பரிசோதனைக்கு பயணிகளிடம் தலா ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. 
பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.5,000; 45 நிமிடங்களில் முடிவு
பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.5,000; 45 நிமிடங்களில் முடிவு

தில்லி விமான நிலையத்தில் கரோனா பிசிஆர் பரிசோதனைக்கு பயணிகளிடம் தலா ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. 

வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் கட்டாயம் 72 மணி நேரத்திற்குள்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில், தில்லி விமான நிலையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், பரிசோதனை முடிவுகள் 45 முதல் 60 நிமிடங்களில் தெரிவிக்கப்படும் எனவும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் மேலும் கூறியதாவது, விமான நிலையத்தில் 50 பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மக்களுக்கு தாமதமின்றி கரோனா பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் 45 முதல் 60 நிமிடங்களில் அறிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்பவர்களுக்கு பரிசோதனை சான்றிதழ் கேட்கப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் பிசிஆர் கருவிகள் மூலம் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக மக்களிடம் ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com