வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா; 23 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். 

News image
தமிழகத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா; 23 பேர் பலி
Updated On :9 ஆகஸ்ட் 2021, 2:19 pm

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,929 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 1,956 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,929-ஆக குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,929 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1,886 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,56,666-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக 23 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,340-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக அதிகபட்ச பாதிப்பு:

கோவை - 241
சென்னை - 187 
ஈரோடு - 185
செங்கல்பட்டு - 105

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.