காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் வாக்குமூலம்...

assasianation attempt on farooq abdullah

ஃபரூக் அப்துல்லா - கோப்புப் படம்

Published On :12 மார்ச் 2026, 4:25 pm IST

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல வேண்டுமென 20 ஆண்டுகளாகக் காத்திருப்பதாக, அவரைக் கொலை செய்ய முயன்று கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, கடந்த புதன்கிழமை (மார்ச் 11) இரவு ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கமால் சிங் ஜாம்வால் (வயது 63) எனும் நபர் ஃபரூக் அப்துல்லாவின் பின்னாலிருந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். உடனடியாக, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால், ஃபரூக் அப்துல்லா நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ஜம்முவின் பூரணி மண்டி பகுதியைச் சேர்ந்த கமால் சிங் ஜாம்வாலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஃபரூக் அப்துல்லாவை கொலை செய்ய வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாகவே காத்திருப்பதாகவும், இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், கமால் சிங் ஜாம்வால் கூறியுள்ளார்.

இத்துடன், இந்தக் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டப்போது, எனக்கு எனது சொந்தம் நோக்கம் இருக்கிறது என்று கூறிய அவர் முழுமையான காரணத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கு நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Summary

The man arrested for attempting to assassinate Farooq Abdullah has confessed that he had been waiting for 20 years to kill him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.