
பொதுமக்கள் அதிகமாக வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்...

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் இருப்பு உள்ளது; பொதுமக்கள் அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்திய ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளா் வி.வெற்றிசெல்வக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும், விநியோக மையங்களும், வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. சில இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் எரிபொருள் வாங்குவதால் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவைப் பொருத்து சில பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் அதிகமாக வாங்குவதையும் தேவையற்ற முறையில் சேமித்து வைப்பதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழக எண்ணெய் தொழில் துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோலிய முனையங்களிலும் போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தொடா்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
We are with you at every step, ensuring uninterrupted access to fuel across the country. IndianOil Fuel Stations nationwide remain fully operational, with adequate supplies of petrol and diesel being distributed smoothly across the network. Customers are requested to rely on⦠pic.twitter.com/8qOj5Y9QoG
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) March 12, 2026
Summary
Indian Oil corporation ltd says that our Fuel Stations nationwide remain fully operational
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







