ஜம்மு - காஷ்மீரில், 2024 அக்டோபர் முதல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள் உள்ளிட்ட 1,400-க்கும் அதிகமான கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த முதல்வர் ஒமர் அப்துல்லா, கடந்த 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் வீடுகள் உள்ளிட்ட 1,425 சட்டவிரோத கட்டமைப்புகள் இடித்து தகர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உரிய விசாரணைகளுக்குப் பின் வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக, முதல்வர் ஒமர் அப்துல்லா உறுதியளித்துள்ளார்.
மேலும், ஜம்முவில் அமைந்திருந்த பத்திரிகையாளர் அர்ஃபாஸ் அஹமது டயிங் என்பவரின் வீடும் கடந்த நவம்பரில் இடித்து தகர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 1,194 குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் 231 வணிகக் கட்டடங்கள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்படியாக ஸ்ரீநகரில் 119 வணிகக் கட்டமைப்புகள் உள்பட 1,133 கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு மாவட்டத்தில் 75 வணிகக் கட்டமைப்புகள் உள்பட 237 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Jammu and Kashmir, more than 1,400 structures, including illegally constructed houses, have been demolished since October 2024.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்

வாங்சுக்கின் உண்ணாவிரதம்! மௌனம் கலைக்குமா மத்திய அரசு? ஒமர் அப்துல்லா!

ஒமர் அப்துல்லாவுக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்! காரணம்?








