ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியலில் டென்னிஸ் நாயகன் ரோஜர் ஃபெடரர்!
ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியலில் டென்னிஸ் நாயகன் ரோஜர் ஃபெடரர் இணைந்துள்ளதைப் பற்றி...


ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் முன்னணி பில்லியனர்கள் பட்டியலில் டென்னிஸ் நாயகன் ரோஜர் ஃபெடரர் முதல்முறையாக இணைந்துள்ளார்.
டென்னிஸ் உலகில் தவிர்க்க முடியாக நட்சத்திரங்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர், 2003 ஆம் ஆண்டில் விம்பிள்டன் வெற்றியுடன் தனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை தொடங்கியவர். இதுவரை 20 கிராண்ஸ்ட்லாம் போட்டிகளில் வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், 6 ஏடிபி பட்டங்கள், 28 மாஸ்டர்ஸ் பட்டங்கள் என்ற சாதனைகளையும் படைத்திருக்கிறார்.
இதுவரை 24 ஆண்டு கால ஆட்டங்களில், 310 வாரங்கள் தொடர்ந்து உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். 103 சுற்றுப்பயணங்களில் வெற்றி, மொத்தமாக 1251 போட்டிகளில் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
இவ்வளவு சாதனைகளையும் படைத்துள்ள ரோஜர் ஃபெடரர், முதல்முறையாக ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இணைந்து அசத்தியிருக்கிறார். அவரது சொத்துமதிப்பு 1.1 பில்லியல் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிக்கும் அதிகம்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 44 வயதான ரோஜர் ஃபெடரர் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக, ஒரே ஆண்டில் 100 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, யுனிக்லோ, ரோலக்ஸ், மெர்ஸிடஸ் உள்ளிட்ட பிராண்டுகள் மூலமாகவும் அவர் வருவாய் ஈட்டுகிறார்.
மேலும், ஸ்விஸ் தடகள ஆடை நிறுவனத்தில் பங்குகளில் மூன்று சதவிகிதப் பங்குகளை ஃபெடரர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆடை நிறுவனம் 15 பில்லியன் டாலர்கள் வணிகத்தைக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...