காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

News image
காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் ( கோப்புப்படம் )
Updated On :11 ஆகஸ்ட் 2021, 9:35 am

DIN

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர்  சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் தீவிரவாதிகள் சிக்கிக்கொள்வதும் பின் தாக்குதலில் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

3 ஏ.கே ரக துப்பாக்கிகள் ,12 ஏ.கே மேகசின்ஸ் ,  358 துப்பாக்கி குண்டுகள் , இரண்டு கை துப்பாக்கிகள் , கை துப்பாக்கிகளின் மேகசின்ஸ் மற்றும்  6 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.