மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டனரா? வெளியான பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள், பாதுகாவலர்கள் இடையேயான தள்ளுமுள்ளு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் தள்ளுமுள்ளு
மாநிலங்களவையில் தள்ளுமுள்ளு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள், பாதுகாவலர்கள் இடையேயான தள்ளுமுள்ளு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பாதுகாவலர்களை தள்ளுவது போன்ற சிசிடிவி காட்சி இன்று வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுவந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவுபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்பிக்களிடம் பாதுகாவலர்கள் கடினமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், இதுகுறித்த சிசிடிவி விடியோ காட்சி  இன்று வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை நடுவே எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்புவது, பாதுகாவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய 2.5 மணி நேர சிசிடிவி விடியோ வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் காகிதங்களை கிழித்து தூக்கி ஏறிவது, அதில், ஒருவர் மேஜையில் ஏறுவது போன்றவையும் விடியோவில் பதிவாகியுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், இந்த விடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள், பேரணி நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இந்த விவகாரத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com