ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு மத்திய அரசு தடை

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிகரித்துவரும் காலநிலை மாற்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வித நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப் பயன்பாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com