‘இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’: டிவிட்டரை சாடிய ராகுல்காந்தி

மத்திய அரசின் பேச்சைக் கேட்டு சுட்டுரை நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசின் பேச்சைக் கேட்டு சுட்டுரை நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சுட்டுரை நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியின் சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் இதர தலைவர்களின் சுட்டுரைக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, சுட்டுரை நிறுவனம் மத்திய அரசின் சொல் கேட்டு நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

மேலும்,  “இது ராகுல் காந்தி மீதான தாக்குதல் மட்டும் அல்ல. இது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான தாக்குதல். நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிவிட்டரில் நாமது கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்திரம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் உணமையில் அப்படி இல்லை. இது வெளிப்படையான ஒரு நடுநிலை தளம் அல்ல. இது ஒரு ஒருதலைபட்சமானது. நாட்டின் அரசியல் செயல்பாட்டில் டிவிட்டர் தலையிடுகிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com