இஸ்ரேல் - ஈரான் போரினால் கடந்த 3 நாள்கள் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் இன்று(மார்ச் 5) ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,530.48 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 899.71 புள்ளிகள் அதிகரித்து 80,015.90 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 285.40 புள்ளிகள் உயர்ந்து 24,765.90 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
நிஃப்டி 50 குறியீட்டில் அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ பங்குகள் அதிக லாபம் ஈட்டின. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.52 சதவீதம், 1.58 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
துறை வாரியாக, நிஃப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 2.3 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி எண்ணெய் & எரிவாயு மற்றும் கட்டுமான பொருள்கள் குறியீடும் சிறப்பாகச் செயல்பட்டன. ஐடி பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் 9 பங்குகள் சரிந்தும் 21 பங்குகள் ஏற்றத்துடனும் முடிந்துள்ளன. அதானி போர்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை லாபத்தைப் பெற்றன. டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்தன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தென்படுவதனால் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்கா திருப்திகரமான மாற்றுச் சலுகையை வழங்கினால், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடத் தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 பைசா உயர்ந்து 91.60 ஆக முடிந்தது.
கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.84% உயர்ந்து 82.90 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Stock Market Close: Sensex jumps 900 pts, Nifty atop 24,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


