

இந்த வாரத்தின் முதல் வா்த்தக நாளான நேற்று(திங்கள்) பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) காளையின் ஆதிக்கம் தொடர்கிறது.
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ் இன்று காலை 84,210 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 306.19 புள்ளிகள் அதிகரித்து 84,371.94 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86.65 புள்ளிகள் உயர்ந்து 25,953.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் எடர்னல், ஆக்சிஸ் வங்கி, டிரென்ட், என்டிபிசி, டைட்டன், ஆர்ஐஎல், சன் பார்மா, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்று வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.37 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.44 சதவீதமும் உயர்ந்தன.
துறை வாரியாக நிஃப்டி மெட்டல் 1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில் நிஃப்டி பொதுத்துறை வங்கி கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையால் பங்குச்சந்தை வணிகம் நேர்மறையுடன் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.