/

தேர்தல் வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். 
இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் கடன் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளதாகவும், எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் போடி தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்துள்ளார். 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அபோது, இவ்வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.