ஆப்கனில் சிக்கித் தவிக்கும் மக்கள்: எல்லை நாடுகளிடம் உதவி கோரும் ஐநா

தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து தப்பிவரும் மக்களைப் பாதுகாக்க எல்லைப் பகுதிகளை மூட வேண்டாம் என ஆப்கன் எல்லை நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையேயான மோதலில் தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களை ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட தலிபான்கள் தற்போது தலைநகர் காபூலை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அவை தலிபான்களின் முன்னேற்றத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளது.

பசி, பட்டினியால் மக்கள் தவித்து வரும் இந்த சூழல் மனிதாபிமானத்தின் பேரழிவு என ஐநா தெரிவித்துள்ளது. "இன்னும் நிலைமை மோசமாகலாம் என நாங்கள் அஞ்சுகிறோம். மக்கள் கடந்த சில நாள்களாக பசியால் தவித்து வருகின்றனர்” என ஐநா உணவு திட்டக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து 2 லட்சத்து 500 க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநா அவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்துள்ளது.

மேலும், “மக்கள் தங்குமிடங்கள் கிடைக்காததால் திறந்தவெளிகளிலும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லை நாடுகள் தலிபான்களிடமிருந்து தப்பி வரும் மக்களை தங்களது நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டும்” என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com