டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மாற்றம்

டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 
இதனிடையே, சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கை டுவிட்டா் நிறுவனம் தாற்காலிகமாக முடக்கியது. 
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன், சுஷ்மிதா தேவ் மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகளும் முடக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. 

மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தங்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரி அமெரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
டிவிட்டர் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com