
ராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தேசிய நெடுஞ்சாலை (NH8)இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை எதிரெதிரே வந்த இரண்டு லாரிகள் மோதிக்கொண்டன. இதில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இரண்டு லாரிகளும் டிவைடரைக் கடக்கும்போது இரண்டும் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு லாரிகளிலும் மொத்தம் ஐந்து பேர் இருந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆதர்ஷ் நகரின் துணை ஆய்வாளர் கன்ஹையா லால் தெரிவித்தார்.