புணேவில் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்

புணேவில் 37 வயதான மோடியின் ஆதரவாளர் ஒருவர் அவரின் மார்பளவு சிலையுடன் கூடிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
புணேவில் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்
புணேவில் மோடிக்கு கோயில் கட்டிய ஆதரவாளர்

புணேவில் 37 வயதான மோடியின் ஆதரவாளர் ஒருவர் அவரின் மார்பளவு சிலையுடன் கூடிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள ஆந்த் பகுதியைச் சேர்ந்தவர் மயூர் முண்டே. 37 வயதான இவர் நில விற்பனை தொழில் செய்துவருகிறார். பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான முண்டே மோடிக்கு கோயில் கட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து சிவப்பு பளிங்கு கற்களை இறக்குமதி செய்து கோயிலை முண்டே கட்டியுள்ளார். பிரதமர் மோடியின் மார்பளவு சிலையுடன் கூடிய இந்த கோயில் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள முண்டே, “ ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, முத்தலாக் பிரச்னை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதை கெளரவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com