அன்றைய தலிபான்களுக்கும், இன்றைய தலிபான்களுக்கும் என்ன வித்தியாசம்?

1990-களிலும், இன்றைய தலிபான்களுக்கும் இடையே அனுபவமும், பார்வையும் மாறுபட்டிருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காபூல்
காபூல்


1990-களிலிருந்த தலிபான்களுக்கும், இன்றைய தலிபான்களுக்கும் இடையே அனுபவமும், பார்வையும் மாறுபட்டிருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தூதரகங்களின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்படும், பெண்கள் மீது பாதுகாப்பு காட்டப்படாது, அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய அரசை அமைக்க விரும்புகிறோம் என்று தலிபான் நிலைப்பாட்டை செய்தித் தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித் தெரிவித்தார்.

அப்போது 1990-களிலிருந்த தலிபான்களுக்கும், இன்றைய தலிபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "முஸ்லிம்கள் என்பதால் சித்தாந்தங்களும், நம்பிக்கைகளும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அனுபவத்தின் அடிப்படையில் மாற்றம் இருக்கிறது. இவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் வேறுபட்ட பார்வை இருக்கிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com