கரோனா பேரிடர்: யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்

ராஜஸ்தானில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளரின் செயல் அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்
யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளரின் செயல் அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுற்றுலாத் துறை முடங்கியுள்ளது. சுற்றுலாத் துறைகளை நம்பி இருக்கும் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூர் அருகே ஹாத்திகோன் என்ற கிராமத்தில் 86 வளர்ப்பு யானைகள் உள்ளன. கரோனா பேரிடர் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்ததால் தங்களது வளர்ப்பு யானைகளுக்கு உணவு வாங்க பணம் இல்லாமல் உரிமையாளர்கள் அனைவரும் சிரமத்தில் உள்ளனர்.

8 யானைகளின் உரிமையாளரான சோயப் கூறுகையில், “எப்போதும் ஒன்று அல்லது இரண்டு யானைகள் சவாரிக்கு செல்லும். ஒரு சவாரிக்கு ரூ. 1,100 வசூலிக்கப்படும். ஆனால், அந்த தொகையானது, யானைகளின் உணவுகளுக்கே சரியாக இருக்கும். இந்த வருமானம் தற்போது தடைபட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.”

3 யானைகளின் உரிமையாளரான ஆசிஃப் கூறுகையில், “யானைகளை பராமரிக்க நாளொன்றுக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை செலவாகின்றன. மாநில அரசு அளிக்கும் நிவாரணம் போதுமானதாக இல்லை.

எங்கள் கிராமத்திலிருந்து அம்பெர் சுற்றுலாத் தலத்திற்கு சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 30 யானைகள் செல்லும். ஆனால், தற்போது சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் வருவதில்லை. 

அனைத்து யானைகளும் சத்தாண உணவுகளை சப்பிட்டு வருகின்றன. வரும் காலங்களிலும் சத்தாண உணவே வழங்கப்படும். எங்கள் வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைத்து யானைகளுக்கு உணவளிக்கப்பட்டு வருகின்றோம். யானைகளை எங்கள் குடும்ப உறுப்பினராக தான் பார்க்கின்றோம்.” 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com