தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்

தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், முதுபெரும் இலக்கியவாதி குமரிஅனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி (78) அம்மாள் இயற்கை எய்தினார்.

News image
கிருஷ்ணகுமாரி
Updated On :18 ஆகஸ்ட் 2021, 5:09 am

DIN

சென்னை:  தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், முதுபெரும் இலக்கியவாதி குமரிஅனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி (78) அம்மாள், சென்னையில் புதன்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை பகிர்ந்துள்ள இரங்கல் பதிவில்,
"என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று புதன்கிழமை
அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி, நல்லொழுக்கத்துடன்
வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

என் தாயாரின் இறுதி ஆசைப்படி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எனது
இல்லத்தில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக
என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை உடல் நல்லடக்கம்
செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன், என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி இரங்கல்: 
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, ஆளுநரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.